தொடர்மழை! 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை!1388286466
தொடர்மழை! 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை! மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் நீலகிரி,கோவை,தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில்,தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை,குந்தா,கூடலூர் மற்றும் பந்தலூரில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை வழங்கி அம்மாவட்ட ஆட்சியர் அம்ரித் உத்தரவிட்டுள்ளார்.