உலக செஸ் ஒலிம்பியாட் 2022 தமிழ்நாட்டில் நடைபெறும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
உலக செஸ் ஒலிம்பியாட் 2022 தமிழ்நாட்டில் நடைபெறும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்துவதில் தமிழ்நாடு பெருமை கொள்வதாக தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு பெருமிதமடைகிறார். ராஜா, ராணிகளை வரவேற்கிறோம் என முதலமைச்சர் ஸ்டாலின் கொண்டாடுகிறார். அப்படி என்ன தான் ஸ்பெஷல் ஒலிம்பியாட் செஸ் விளையாட்டில்... விவரிக்கிறது. "செஸ் விளையாட்டின் மெக்கா சென்னை" என வர்ணிக்கும் வாக்கியத்திற்கு மேலும் வலு சேர்க்கிறது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடத்தப்படும் என்று அறிவிப்பு. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த ஒலிம்பியாட் செஸ் போட்டி இந்த ஆண்டு 44 வது முறையாக நடத்தப்படுகிறது. மாஸ்கோவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் உக்ரைன் - ரஷ்யா போரால் போட்டிகளை சென்னையில் நடத்த சர்வதேச செஸ் கூட்டமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இணைந்து 44 வது உலக செஸ் ஒலிம்பியாட் தொடரை வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த போட்டி ஜூலை 26 ம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ம் தேதி வரை நடைபெறுகிறது. ...