ஏகே62 கன்பார்ம் ஆயிடுச்சு... அடுத்தப்படம் இவரோடயா... சூப்பர் காம்பினேஷனாச்சே!


ஏகே62 கன்பார்ம் ஆயிடுச்சு... அடுத்தப்படம் இவரோடயா... சூப்பர் காம்பினேஷனாச்சே!


நடிகர் அஜித்தின் வலிமை படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தப் படம் அதிகமான பைக் ரேசிங் காட்சிகள் மற்றும் அதிகமான சென்டிமெண்ட் காட்சிகளை கொண்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், படம் சிறப்பான வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடி வருகிறது.

இந்தப் படத்தில் இரண்டாவது முறையாக அஜித் -ஹெச் வினோத் மற்றும் போனிகபூர் கூட்டணி இணைந்த நிலையில், தற்போது இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக ஏகே61 படத்திற்காக மீண்டும் இணையவுள்ளது. இந்தப்படத்தின் சூட்டிங் துவங்கவுள்ள நிலையில், தீபாவளி ரிலீசாக படம் வெளியாகவுள்ளதாக முன்னதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலிமை படம் அதிகமான ஸ்டண்ட் காட்சிகளுடன் வெளியான நிலையில், இந்தப் படம் எப்படி இருக்கும், எந்த கதைக்களத்தை கொண்டிருக்கும் என்பது குறித்து அஜித் ரசிகர்கள் தற்போது முதலே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் அஜித்தின் வித்தியாசமான லுக்குகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

காதில் கடுக்கனுடன் நீண்ட தாடியுடன் கூலர்ஸ் அணிந்துக் கொண்டு அஜித் இருக்கும் புகைப்படத்தை தயாரிப்பாளர் போனிக்கபூரே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த நிழல் புகைப்படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அஜித்தின் மற்றொரு லுக்கும் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்தப் படத்தின் சூட்டிங்கே இன்னும் துவங்கப்படாத நிலையில் தற்போது அஜித் 62 படத்தின் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ளார். இதுகுறித்து நேற்றைய தினம் லைகா தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அடுத்தடுத்த பட அறிவிப்புகள்

அஜித்தின் அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகளால் அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகின்றனர். இந்த படங்களை தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டிங்கில் வைத்துள்ளனர். இந்நிலையில் அஜித்தின் 63வது படத்தை இயக்கவுள்ளவர் குறித்தும் இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

அஜித்துடன் முன்னதாக வீரம், விவேகம், வேதாளம் மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களில் கூட்டணி அமைத்திருந்த இயக்குநர் சிவா மீண்டும் ஐந்தாவது படமாக ஏகே 63 பத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அஜித்துடன் வடிவேலு காமெடியனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog