மூன்றாவது நாளாக தங்கத்தின் விலையில் சரிவு! இல்லத்தரசிகள் ஹேப்பி!


மூன்றாவது நாளாக தங்கத்தின் விலையில் சரிவு! இல்லத்தரசிகள் ஹேப்பி!


கடந்த சில நாட்களாக, உலகளாவிய காரணிகள், சர்வதேச சந்தையின் நிலை, மக்களின் வாங்கும் திறன் ஆகியவற்றுக்கு ஏற்ப தங்கத்தின் விலையில் மாற்றத்தைக் கண்டு வருகிறோம். எனினும், வரும் காலங்களில் தங்கத்தின் விலையில், ஏறுமுகமே நிலைக்கும் என்கிறார்கள் சந்தை வல்லுனர்கள். 

உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக தங்கம் வாங்குவதிலும் தற்போது பல குழப்பங்கள் உள்ளன. இந்த நெருக்கடியால் உலகளாவிய தங்க சந்தையில் மிகப்பெரிய ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் தங்கம் விலை 3 நாட்களாக தொடர்ந்து குறைந்து வருவதால், மக்களுக்கு சற்று நிவாரணம் கிடைத்துள்ளது. இன்றும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

தங்கம் விலை நிலவரம்

சென்னையில் இன்று காலை நிலவரப்படி 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து ரூ. 4,879-க்கு விற்பனையில் உள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 64 குறைந்து 39,032 பாய்க்கு விற்பனையில் உள்ளது. 18 காரட் தங்கத்திம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 3,997-க்கு விற்கப்படுகின்றது.

24 காரட் தூய தங்கத்தின் ஒரு கிராம் விலை ரூ. 5,278 ஆகவும் ஒரு சவரன் விலை ரூ. 42,224 ஆகவும் உள்ளது. 

வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று காலை நிலவரப்படி, ஒரு கிராம் வெள்ளி 70.00 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 70,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

இந்தியாவைப் பொறுத்த வரை, பல்வேறு மாநிலங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் மாறுபடும். பல்வேறு வரி வகைகளைப் பொறுத்து பல்வேறு இடங்களில் விலைகள் மாறுபடுகின்றன. மேலும், செய்கூலி, சேதாரம் ஆகியவற்றின் அடிப்படையிலும், கடைக்கு கடை விலையில் ஏற்ற இறக்கத்தைக் காண முடிகின்றது

ரஷ்யா உக்ரைன் போரால், பல வித அத்தியாவசிய பொருட்களோடு கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலையும் அதிகமாக உயர்ந்தது. இதன் தாக்கம் அனைத்து நாடுகளைப் போல இந்தியாவிலும் காணப்பட்கின்றது. 

உலகளாவிய சந்தைகளில் நேர்மறையான அணுகுமுறை உள்ளதால், தங்கத்தில் முதலீடு செய்ய இது சரியான நேரமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகிறார்கள். 

இந்தியாவைப் பொறுத்த வரை, பல்வேறு மாநிலங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் மாறுபடும். பல்வேறு வரி வகைகளைப் பொறுத்து பல்வேறு இடங்களில் விலைகள் மாறுபடுகின்றன. மேலும், செய்கூலி, சேதாரம் ஆகியவற்றின் அடிப்படையிலும், கடைக்கு கடை விலையில் ஏற்ற இறக்கத்தைக் காண முடிகின்றது.

Comments

Popular posts from this blog

Sorry Netflix HBO Max is the best streaming service now mdash here s why #Mdash

Puff Pastry Pesto Wreath