2 வாரத்தில் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிரபல நிறுவனம்!


2 வாரத்தில் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிரபல நிறுவனம்!


கார்ஸ்24 (Cars24) என்ற பயன்படுத்தப்பட்ட கார்களை விற்பனை செய்யும் நிறுவனம், கடந்த 2 வாரத்தில் மட்டும் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

அந்நிறுவனத்தில் இதுபோன்ற பணி நீக்கம் செய்யப்பட்ட பெரும்பாலானோர் அடிமட்டத்தில் பணிபுரிபவர்கள் என்று தெரியவந்துள்ளது. அதன்படி, சுமார் 9,000க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வரும் அந்நிறுவனத்தின் 6.6 சதவீதம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வேதாந்து (Vedantu), அனாகாடமி (Unacademy) மற்றும் மீஷோவிற்குப் பிறகு, இப்போது IPO-க்கு வந்த ஆட்டோமொபைல் நிறுவனமான கார்ஸ்24 கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சுமார் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இந்த ஸ்டார்ட்அப் நிறுவனமானது பெரும்பாலும் தங்களது அனைத்து பிரிவுகளிலும் குறைந்த பதவிகளில் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

முன்னதாக, பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் கல்வி சார்ந்த EduTech ஸ்டார்ட்-அப் நிறுவனமான வேதாந்து. கடந்த 2014-இல் தொடங்கப்பட்டது இந்நிறுவனம். இந்தியாவின் யுனிகார்ன் ஸ்டார்ட்-அப்களில் வேதாந்துவும் ஒன்று. தொடர்ச்சியாக சீரான இடைவெளியில் நிதி ஆதாரத்தையும் இந்நிறுவனம் திரட்டி வருகிறது.

இந்நிலையில், சமீபத்தில் தங்கள் நிறுவன ஊழியர்கள் சுமார் 200 பேரை பணி நீக்கம் செய்திருந்த நிலையில், தற்போது மீண்டும் 424 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.

வேதாந்து நிறுவனத்தை தொடர்ந்து, ஸ்டார்ட் அப் நிறுவனமான அனகாடமி 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. அந்த வரிசையில் தற்போது கார்ஸ்24 நிறுவனமும் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.  நிறுவனத்தின் செலவைக் குறைக்கவே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

 

Comments

Popular posts from this blog