‘விக்ரம்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல்- படம் வெளியாகுமா?!
‘விக்ரம்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல்- படம் வெளியாகுமா?!
கமல் நடித்துள்ள விக்ரம் படம் வருகிற 3ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவுள்ளது. கமல்ஹாசனே தயாரித்துள்ள இப்படத்தின் தமிழக விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட்ஸ் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது. சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் கமல்ஹாசனின் படம் எனும் காரணத்தால் இதற்குப் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை சில பெரிய படங்கள் அதிகாலையில் சிறப்புக் காட்சிகளாகவும் திரையிடப்படுகின்றன. பண்டிகை உள்ளிட்ட சமயங்களில் மக்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் விதமாக கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் அதிகாலையில் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படுவதைத் தடுக்கக் கோரி நபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திரையரங்குகளில் சிறப்புக் காட்சிகளின்போது அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டு பொதுமக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுவதாகவும் வரி ஏய்ப்பு நடைபெறுவதால் அரசுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழ்நாடு அரசும், காவல் துறையும் இது தொடர்பாகப் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க | அந்த 30 நிமிடம்... ‘டான்’ படம் பார்த்துக் கண்ணீர்விட்ட ரஜினிகாந்த்!
கமலின் விக்ரம் படத்தைப் பொறுத்தவரை ஜூன் 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகவுள்ளது. அடுத்தடுத்த நாட்கள் வார இறுதி நாட்களாக இருப்பதால் வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட வாய்ப்பு அதிகம். இந்நிலையில் தற்போது நடந்துவரும் இந்த வழக்கில் நீதிமன்றம் என்ன மாதிரியான தீர்ப்பு வழங்கப்போகிறது எனத் தெரியவில்லை. ஒருவேளை தடை உத்தரவு வரும் பட்சத்தில் விக்ரம் படத்துக்கு சிறப்புக் காட்சிகள் இருக்க வாய்ப்பில்லாமல் போகும்.
மேலும் படிக்க | ‘விக்ரம்’ படத்தின் கதை இதுதானா? அதிலும் இப்படி ஒரு சர்ப்ரைஸா?!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR
Comments
Post a Comment