வீட்டுக்கு வரும் ராதிகா.. மாட்ட போகும் கோபி! என்ன நடக்கிறது பாக்கியலட்சுமி சீரியலில்?


வீட்டுக்கு வரும் ராதிகா.. மாட்ட போகும் கோபி! என்ன நடக்கிறது பாக்கியலட்சுமி சீரியலில்?


பாக்கியலட்சுமி சீரியலில் கோபி எப்போது மாட்டுவார்? என்று ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். வீட்டில் நடக்கவிருக்கும் ராமமூர்த்தி தாத்தா பிறந்த நாள் விழாவில் கோபி மாட்ட வேண்டும் என ரசிகர்கள் நினைக்கின்றனர். ஆனால் அது இயக்குனர் கையில் தான் உள்ளது.

பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் மகா சங்கமம் எபிசோடு கடந்த 1 வாரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது. கோபியின் அப்பா ராம மூர்த்தி பிறந்த நாளுக்காக காரைக்குடியில் இருந்து மூர்த்தி குடும்பம் சென்னைக்கு வந்துள்ளனர். அதுமட்டுமில்லை, பாக்கியா ராதிகாவையும் இந்த ஃபங்ஷனுக்கு அழைத்துள்ளார். இதனால் கோபி எங்கே மாட்டிக் கொள்வோமோ? என்ற பயத்தில் வீட்டை சுற்றி வருகிறார். ஒரு பக்கம் ராதிகா , பாக்கியா வீட்டுக்கு நீங்களும் வர வேண்டும் என்கிறார். இந்த பக்கம் பாக்கியா, ராதிகாவை இந்த முறையாவது நீங்கள் சந்திக்க வேண்டும் என்கிறார்.

எல்லாத்துக்கும் கண்ணம்மா தான் காரணம்.. உண்மையை போட்டுடைத்த பாரதி!

எப்படியாவது இதிலிருந்து தப்பித்தால் போதும் என்கிறார் கோபி. வீட்டுக்கு வந்து இருக்கும் மூர்த்தி குடும்பத்துக்கு கோபி மீது சந்தேகம் வந்து விட்டது . அதுமட்டுமில்லை கோபி இந்த நிகழ்ச்சி நடைபெற கூடாது என்று ஃபோனில் பேசியதை கதிர் கேட்டுவிட்டார். அதனால் கோபியின் ஒவ்வொரு மூவையும் கதிர், ஜீவா உன்னிப்பாக கவனிக்கின்றனர். கோபி எந்த நாடகம் போட்டாலும் அதை தடுத்து விடுகின்றனர்.

அப்படித்தான் கோபி நெஞ்சு வலி வந்தது போல் நடிக்க, அதையும் மூர்த்தி சரி செய்து விட்டார். இன்றைய எபிசோடில் கோபி வீட்டில் இருக்கும் எல்லா ஃபோட்டோவையும் கழற்றுகிறார். மூர்த்திக்கு மேலும் மேலும் சந்தேகம் அதிகம் ஆகிறது. மொத்த குடும்பமும் ராமமூர்த்தி தாத்தா பிறந்த நாளுக்காக வீட்டை அலங்காரம் செய்கின்றனர். கோபி,  ராதிகா இந்த பார்ட்டிக்கு வரக்கூடாது என்று கடவுளையே வேண்டுகிறார். மனிஷனுக்கு அவ்வளவு பயம்.

சத்யாவை வெறுக்கும் மொத்த குடும்பம்.. என்ன செய்ய போகிறார் வருண்?

இந்த நேரத்தில் தான் கோபி, ஈஸ்வரி அம்மாவிடம் போய் ஆஃபீஸில் முக்கியமான வேலை என்று சொல்ல, அவ்வளவு தான் ஈஸ்வரி அம்மா கோபத்தின் உச்சத்திற்கே செல்கிறார். ஒருவேளை நீ வீட்டை விட்டு போனால் இனிமேல் உன்னிடம் பேசவே மாட்டேன் என்கிறார். என்ன செய்வது என்று தெரியாமல் முழிக்கிறார் கோபி. ராதிகா ஈவ்னிங் வீட்டுக்கு வந்த பிறகு தான் பெரிய கச்சேரியே இருக்க போகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Comments

Popular posts from this blog