வாட்ஸ்அப் மூலம் இரண்டே நிமிடங்களில் உடனடி வீட்டு கடன் - புதிய வசதியை அறிமுகம் செய்த HDFC!
வாட்ஸ்அப் மூலம் இரண்டே நிமிடங்களில் உடனடி வீட்டு கடன் - புதிய வசதியை அறிமுகம் செய்த HDFC!
வாட்ஸ்அப் மூலம் வீட்டுக் கடன் பெறுவதற்காக ஸ்பாட் ஆஃபர் (Spot Offer) எனப்படும் புதிய திட்டத்தை HDFC அறிமுகம் செய்து உள்ளது. வீடு வாங்குபவர்களுக்கு கொள்கை ரீதியிலான வீட்டுக் கடன் ஒப்புதல் (in-principle home loan approval) வெறும் 2 நிமிடங்களில் வழங்க ஸ்பாட் ஆஃபர் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக HDFC குறிப்பிட்டுள்ளது. வீடு வாங்க நினைப்பவர்கள் 24x7 மணிநேரமும் இந்த வசதியைப் பெறலாம். வெயிட்டிங் டைம் இல்லாததால் ஹோம் லோன் அப்ரூவல் லெட்டருக்காக அவர்கள் காத்திருக்க வேண்டியதில்லை.
HDFC Ltd நிறுவனமானது Cogno AI உடன் இணைந்து, நிபந்தனையுடன் கூடிய வீட்டுக் கடன் ஒப்புதலை உடனடியாக வழங்க WhatsApp பிசினஸ் பிளாட்ஃபார்மில் இந்த ஸ்பாட் ஆஃபர் தீர்வை உருவாக்கியுள்ளது. கனவு இல்லத்தை வாங்க நினைப்பவர்கள் இன்ஸ்டன்ட் ஹோம் லோன் வாங்குவதற்கான செயல்முறையை தொடங்க, HDFC-ன் WhatsApp நம்பருக்கு ஒரு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்று நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறி இருக்கிறது.
அந்த அறிக்கையில் HDFC கூறி இருப்பதாவது, நாங்கள் தொடர்ந்து தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எங்களது டெலிவரி திறன்களை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஹோம் லோன்களை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்களது கனவு இல்லத்தை வாங்குவதற்கான வசதியை எங்களது "Spot Offer on WhatsApp" உதவும். இது கொள்கை ரீதியான ஹோம் லோன் அப்ரூவலை உடனடியாகப் பெற உதவும் பிளாட்ஃபார்மாக இருக்கும்.
WhatsApp Business பிளாட்ஃபார்மில் ‘ஸ்பாட் ஆஃபர்’ கட்டமைக்கப்பட்டுள்ளது, இது வாட்ஸ்அப்பில் ஏற்கனவே உள்ள மற்றும் புதிய வாடிக்கையாளர்களுடன் எளிமையான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான முறையில் தொடர்பு கொள்ள அனுமதிக்கும் ஒன்றாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
HDFC ஸ்பாட் ஆஃபரின் கீழ் 2 நிமிடங்களுக்குள் ஹோம் லோன்கள் உடனடியாக அங்கீகரிக்கப்படும் மற்றும் கடன் வாங்குபவர்கள் வாட்ஸ்அப்பில் கடன் ஒப்புதல் கடிதத்தைப் பெறுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Read More : எலான் மஸ்க்கின் ஒற்றை ட்வீட்டால் 20 சதவீத வீழ்ச்சி கண்ட ட்விட்டர் பங்குகள்
HDFC-யின் ஸ்பாட் ஆஃபர் மூலம் ஹோம் லோன் அப்ரூவலுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
* ஹோம் லோன் தேவைப்படுவோர் முதலில் HDFC-ன் Whatsapp நம்பரான +91 98670 00000 -க்கு மெஸ் ஒன்றை அனுப்புவதன் மூலம் உரையாடலைத் தொடங்க வேண்டும்.
* சில முக்கிய அடைப்படை தகவல்களை வழங்குமாறு வங்கி தரப்பிலிருந்து வாடிக்கையாளர்களிடம் கேட்கப்படும்.
* வாடிக்கையாளர்கள் அளிக்கும் குறிப்பிடப்பட்ட தகவல்களின் அடிப்படையில், தற்காலிக / நிபந்தனை ஹோம் லோன் ஆஃபர் லெட்டர் உடனடியாக உருவாக்கப்படும்.
நாம் ஏற்கனவே குறிப்பிடப்படி home loan spot offer வசதியை வாரத்தில் எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் பெறலாம். இந்த Spot Offer on WhatsApp வசதி சம்பளம் பெறும் இந்தியர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று HDFC குறிப்பிட்டு உள்ளது. இந்தியாவில் வீட்டு வசதிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் சிறந்த வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் ஈடுபாட்டிற்காக டிஜிட்டல் மாற்றத்தில் கவனம் செலுத்தி முதலீடு செய்து வருவதாக HDFC Ltd நிர்வாக இயக்குநர் ரேணு சுத் கர்னாட் கூறி இருக்கிறார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Comments
Post a Comment