SBI வங்கியில் சிறப்பு அதிகாரி பணி - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்


SBI வங்கியில் சிறப்பு அதிகாரி பணி - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்


இந்தியாவின் மிக முக்கிய பொதுத்துறை நிறுவனமான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் சிறப்பு பிரிவு அதிகாரி பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை நாளையுடன் முடிவடைகிறது. எனவே, விண்ணபப்தார்கள் உடனடியாக அப்பதவிகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

விண்ணப்பதாரர்கள் https://bank.sbi/web/careers என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள்  நாளை வரை பெறப்படும். அதற்கு பின், இச்சேவைகள் முற்றிலும் நிறுத்தப்படும்.

விண்ணப்பபதாரரின் பெயர், பிறந்த தேதி, பாலினம், வகுப்பு வாரியான இடஒதுக்கீடு, இடைநிலை கல்விச் சான்று எண், சுயவிபரம் (Resume) நிரந்தர முகவரி, தொடர்பு முகவரி, அலைபேசி எண், புகைப்படம், கையெழுத்து, மின்னஞ்சல் போன்ற விவரங்களை சமர்பிக்க வேண்டும்.

ஜூன் 16 அன்று இதற்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.750 ஆகும்.பட்டியல் கண்ட சாதிகள் , பட்டியல் கண்ட பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. ஏனையைப் பிரிவினர் அனைவரும் கட்டாயம் செலுத்த வேண்டும்.

காலிப்பணியிடங்கள்: 




































































































 பணி விபரம்  காலியிடம் 
System Officer (Test Engineer)2
System Officer (Web Developer)1
System Officer (Performance/Senior Automation Test Engineer)1
System Officer (Project Manager)2
System Officer (Project Manager1
Executive (Test Engineer) - ஒப்பந்த முறை10
Executive (Interaction Designer) - ஒப்பந்த முறை3
Executive (Web Developer) - ஒப்பந்த முறை1
Executive (Portal Administrator) - ஒப்பந்த முறை3
Senior Executive (Performance/Automation Test Engineer) - ஒப்பந்த முறை4
Senior Executive (Interaction Designer) - ஒப்பந்த முறை2
Senior Executive (Project Manager) - ஒப்பந்த முறை4
Senior Special Executive (Project Manager) - ஒப்பந்த முறை1
Chief Information Security Officer - ஒப்பந்த முறை1
Vice President and Head (Contact Centre Transformation) - ஒப்பந்த முறை1
Senior Special Executive Program Manager Contact Centre - ஒப்பந்த முறை4
Senior Special Executive Customer Experience Training & Scripts Manager (Inbound & Outbound) - ஒப்பந்த முறை2
Senior Special Executive Command Centre Manager - ஒப்பந்த முறை3
Senior Special Executive- Dialler Operations (Outbound) - ஒப்பந்த முறை1
Senior Executive (Economist) - ஒப்பந்த முறை2
Manager (Performance Planning & Review) - ஒப்பந்த முறை2
Advisor (Fraud Risk) - ஒப்பந்த முறை4
மொத்தம்36

சம்பளம்:

பணிக்கான விரிவான விபரங்கள் தெரிந்துகொள்ள எஸ்பிஐ வலைதளத்தில் உள்ள ஆட்சேர்ப்பு அறிவிப்பை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். விண்ணப்ப படிவங்களை நிரப்புவதற்கான முக்கிய அறிவுரைகளும் வலைதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.

ஆட்சேர்ப்பு அறிவிப்பை பதிவிறக்கம் செய்துகொள்ள இந்த இணைப்பைக்  கிளிக் செய்யவும்

கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர், விண்ணப்பிக்கும்போது, இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது தொழில்நுட்பச் சிக்கல்களோ எழவாய்ப்புள்ளது. எனவே, விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 

Comments

Popular posts from this blog