State Bank : 2வது முறையாக எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வெளியான அதிர்ச்சி செய்தி


State Bank : 2வது முறையாக எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு வெளியான அதிர்ச்சி செய்தி


 நாட்டின் மிகப் பெரிய வங்கியான எஸ்பிஐ கடன்களுக்கான அடிப்படை வட்டியை மறுபடியும் 0.1 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

ரிசர்வ் பேங்க ஆப் இந்தியா இம்மாத தொடங்கத்தில் வங்கிகளுக்கு வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரித்ததை அடுத்து, வங்கிகள் தொடர்ந்து தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் கடனுக்கான வட்டியை உயர்த்தி வருகின்றன. மத்திய வங்கி ரெப்போ விகிதத்தை 0.40 சதவீதம் முதல் 4.40 சதவீதம் வரைக்கும் உயர்த்தியது. இதனையடுத்து நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக்கடன், தனிநபர் கடன் உட்பட கடன்களுக்கான வட்டியை இரண்டாவது முறையாக உயர்த்தியுள்ளது.

சோப்பு முதல் ஷாம்பூ வரை தொடர்ந்து உயரும் பொருட்களின் விலை.. என்ன காரணம்?

எம்சிஎல்ஆர் அடிப்படையில் கடன் வட்டியை 0.1 சதவீதம் அதிகரித்து, 7.1 சதவீதமாக கடந்த மாதம் உயர்த்தியது. இந்த நிலையில் எஸ்பிஐ வங்கி ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக கடன்களுக்கான வட்டி விகிதத்தை மீண்டும் 0.1% ஆக உயர்த்தியுள்ளது. அதன்படி கடந்த ஓர் ஆண்டிற்கான எம்சிஎல்ஆர் வட்டி விகிதம் 7.20% ஆக அதிகரித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் கடந்த 15ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த அதிகரிப்பு மூலம், MCLR (Marginal Cost of Funds Based Lending Rate) இல் கடன் பெற்ற வாடிக்கையாளர்களுக்கு மாத தவணை மற்றும் வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் வெளிப்புற பெஞ்ச்மார்க் அடிப்படையிலான கடன் விகிதத்தை (ஈபிஎல்ஆர்) 6.65 சதவீதமாகவும், ரெப்போ-இணைக்கப்பட்ட கடன் விகிதத்தை (ஆர்எல்எல்ஆர்) 6.25 சதவீதமாகவும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

வீட்டுவசதி மற்றும் வாகன கடன்கள் உட்பட எந்த வகையான கடனையும் வழங்கும் போது வங்கிகள் EBLR மற்றும் RLLR ஐ விட கிரெடிட் ரிஸ்க் பிரீமியத்தை (CRP) சேர்க்கின்றன. எஸ்பிஐ இணையதளத்தில் வெளியிடப்பட்ட தகவலின்படி, திருத்தப்பட்ட எம்சிஎல்ஆர் விகிதம் மே 15 முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த திருத்தத்தின் மூலம் ஓராண்டுக்கான எம்சிஎல்ஆர் முந்தைய 7.10 சதவீதத்தில் இருந்து 7.20 சதவீதமாக அதிகரித்துள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி! உணர்த்தும் அபாயம் என்ன?

எஸ்பிஐ வங்கியில் திருத்தப்பட்ட எம்சிஎல்ஆர் விகிதம் மே 15ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அதாவது, எம்சிஎல்ஆர்விகிதம் 7.10 சதவீதத்திலிருந்து 7.20 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஒரு மாதம் மற்றும் மூன்று மாத எம்சிஎல்ஆர் 10 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 6.85 சதவீதமாகவும், ஆறு மாத எம்சிஎல்ஆர் விகிதம் 7.15 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. மேலும், இரண்டு ஆண்டு எம்சிஎல்ஆர் விகிதம் 0.1 சதவீதம் அதிகரித்து 7.40 சதவீதமாகவும், மூன்று ஆண்டு எம்சிஎல்ஆர் விகிதம் 7.50 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில், இரண்டு ஆண்டு எம்சிஎல்ஆர் 0.1 சதவீதம் அதிகரித்து 7.40 சதவீதமாகவும், மூன்று ஆண்டு எம்சிஎல்ஆர் 7.50 சதவீதமாக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் வட்டி விகித திருத்தத்தைத் தொடர்ந்து, பல வங்கிகள் ஏற்கனவே வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன, மேலும் சில வங்கிகள் வரும் நாட்களில் வட்டி விகிதத்தை மாற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Comments

Popular posts from this blog