ஜூன் 24 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட கலெக்டர் அதிரடி அறிவிப்பு!1402904361


ஜூன் 24 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட கலெக்டர் அதிரடி அறிவிப்பு!


ஜூன் 24ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட  கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடியில்  வருடந்தோறும் சந்தனக்கூடு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். 

 

இந்நிலையில்,  தொடங்கிய சந்தனக்கூடு திருவிழா ஜூன் 24 காலை வரையில் தொடர்ந்து  நடைபெற்று வருகிறது. 

சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு  ஜூன் 24ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கும் அம்மாவட்ட கலெக்டர் உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

 

மேலும் ஜூன் 24ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் விதமாக  வரும் ஜூலை  மாதம்  2ம் தேதி வேலை நாள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

Lemon Lime Dracaena