ஹீரோவாக அண்ணாச்சி ஜெயித்தாரா.?: ‘தி லெஜண்ட்’ படத்தின் ட்விட்டர் விமர்சனம்.! லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் 'தி லெஜண்ட்' படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ளது ‘தி லெஜண்ட்’ படம். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்த பல வெற்றி படங்களை வினியோகம் செய்த கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியன், 'தி லெஜண்ட்' படத்தை அதிக முன் பணம் கொடுத்து தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை வாங்கினார். மேலும், தமிழகமெங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் 'தி லெஜண்ட்' படத்தை வெளியிட முடிவு செய்து இன்று வெளியாகியுள்ளது. எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் மீண்டும் மீண்டும் படம் பார்க்கும் வகையில் ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக 'தி லெஜண்ட்' உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். தனி பாடல் மூலம்...