ஹீரோவாக அண்ணாச்சி ஜெயித்தாரா.?: ‘தி லெஜண்ட்’ படத்தின் ட்விட்டர் விமர்சனம்.!1388730190


ஹீரோவாக அண்ணாச்சி ஜெயித்தாரா.?: ‘தி லெஜண்ட்’ படத்தின் ட்விட்டர் விமர்சனம்.!


லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் 'தி லெஜண்ட்' படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ளது ‘தி லெஜண்ட்’ படம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்த பல வெற்றி படங்களை வினியோகம் செய்த கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியன், 'தி லெஜண்ட்' படத்தை அதிக முன் பணம் கொடுத்து தமிழகம் முழுவதும் வெளியிடும் உரிமையை வாங்கினார். மேலும், தமிழகமெங்கும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் 'தி லெஜண்ட்' படத்தை வெளியிட முடிவு செய்து இன்று வெளியாகியுள்ளது.

எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் மீண்டும் மீண்டும் படம் பார்க்கும் வகையில் ஒரு பக்கா கமர்சியல் மாஸ் படமாக 'தி லெஜண்ட்' உருவாகியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். தனி பாடல் மூலம் உலகமெங்கும் பிரபலமான மும்பை மாடல் ஊர்வசி ரவுத்தலா ‘தி லெஜண்ட்’ படத்தின் வாயிலாக கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

 

மாஸ் ஹீரோக்களுக்கு கிடைக்கும் அதிகாலை நான்கு மணி ஷோ முதல் படத்திலயே சரவணன் அண்ணாச்சிக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை படத்தை பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஜேடி-ஜெர்ரி, ஹாரிஸ் ஜெயராஜுக்கு கம்பேக்காக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள ரசிகர்கள் மற்றபடி படத்தில் வேற ஒன்றும் இல்லை என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஆக்ஷன் படம்ன்னு சொல்லிட்டு காமெடி படத்தை எடுத்து வைச்சு இருக்காங்க. இந்த மாதிரி மாஸ் ஓபனிங் கிடைச்சும் படம் சுமாருக்கும் சுமாராக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர். நாலு பைட், ஐந்து சாங் என தமிழ் சினிமா ஹீரோக்கள் கைவிட்ட அரதப்பழசான பார்முலாவை இந்தப்படத்தில் மீண்டும் கொண்டு வந்துள்ளதாகவும், மொத்தத்தில் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் போல் படம் உள்ளதாகவும் ரசிகர்கள் விமர்சனங்களை குவித்து வருகின்றனர்.

இந்த முறை நான் அடிக்கிற அடி....! - டயலாக் பேசி அசத்திய லெஜண்ட் சரவணன்!

Comments

Popular posts from this blog