இமாச்சல பிரதேசத்தில் கனமழை, நிலச்சரிவு காரணமாக பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு, பல சாலைகள் துண்டிப்பு!1390004586
இமாச்சல பிரதேசத்தில் கனமழை, நிலச்சரிவு காரணமாக பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு, பல சாலைகள் துண்டிப்பு!
இமாச்சல பிரதேசத்தில் கனமழை, நிலச்சரிவு காரணமாக பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது, பல சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக மேலும் 5 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பல சாலைகள் சேதமடைந்து துண்டிக்கப்பட்டுள்ளன. குலுவில் சேதமடைந்த சாலைகள் குறித்த அறிவிப்புகளை ஹிமாச்சலப் பிரதேச மாநில பேரிடர் மீட்புப் படை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டது. சம்பாவில் சேதமடைந்த சாலைகளில் இயந்திரங்கள் செயல்படும் வீடியோவைப் பேரிடர் மீட்புப் படை பகிர்ந்துள்ளது.
Comments
Post a Comment