ஏகே62 கன்பார்ம் ஆயிடுச்சு... அடுத்தப்படம் இவரோடயா... சூப்பர் காம்பினேஷனாச்சே! நடிகர் அஜித்தின் வலிமை படம் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடி வருகிறது. இந்தப் படம் அதிகமான பைக் ரேசிங் காட்சிகள் மற்றும் அதிகமான சென்டிமெண்ட் காட்சிகளை கொண்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், படம் சிறப்பான வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்தப் படத்தில் இரண்டாவது முறையாக அஜித் -ஹெச் வினோத் மற்றும் போனிகபூர் கூட்டணி இணைந்த நிலையில், தற்போது இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக ஏகே61 படத்திற்காக மீண்டும் இணையவுள்ளது. இந்தப்படத்தின் சூட்டிங் துவங்கவுள்ள நிலையில், தீபாவளி ரிலீசாக படம் வெளியாகவுள்ளதாக முன்னதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. வலிமை படம் அதிகமான ஸ்டண்ட் காட்சிகளுடன் வெளியான நிலையில், இந்தப் படம் எப்படி இருக்கும், எந்த கதைக்களத்தை கொண்டிருக்கும் என்பது குறித்து அஜித் ரசிகர்கள் தற்போது முதலே எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் அஜித்தின் வித்தியாசமான லுக்குகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. காதில் கடுக்கனுடன் நீண்ட தாடியுடன் கூலர்ஸ் அணிந்துக் கொண்டு அஜ...