மதுரை : கபடி போட்டியில் பங்கேற்போர் மீது குற்ற வழக்கு இருக்கக்கூடாது; பார்வையாளர்களுக்கு மாஸ்க் கட்டாயம் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம், சிலைமானைச் சேர்ந்த விஷ்ணு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை மாவட்டம் புளியங்குளத்தில் வரும் 21 மற்றும் 22ம் தேதிகளில் கபடி போட்டி நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்கு அனுமதி கோரியும், போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரியும் சிலைமான் போலீசில் மனு அளித்தோம். இதுவரை அனுமதி வழங்கவில்லை. எனவே, கபடி போட்டி நடத்த அனுமதிக்குமாறும், உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபானி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:கபடி போட்டி நடத்த அனுமதிக்கப்படுகிறது. மனுதாரர் மற்றும்... விரிவாக படிக்க >>
கும்பம் ராசிக்கான வார ராசிபலன் ( அக்டோபர் 31 முதல் நவம்பர் 06 ) 2022) - Kumbam Rasipalan. இந்த வாரம், சனி பன்னிரண்டாம் வீட்டில் இருப்பதும், ஆறாம் வீட்டில் உங்கள் முழுப் பார்வையையும் வைப்பதால், உங்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும். ஏனெனில் கடந்த சில வாரங்களாக, அதிகரித்து வரும் வேலை அழுத்தம் மற்றும் பணியிடத்தில் உள்ள சிரமமான வேலை உங்களை சோர்வடையச் செய்யும், அது இப்போது உங்களுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதே நேரத்தில், சந்திரன் பதினொன்றாம் வீட்டில் ஆரம்பத்தில் இருப்பதால், உங்கள் தேவையற்ற செலவுகள் இந்த வாரம் முழுவதும் உங்கள் நிதி நிலைமையை மிகவும் மோசமாக்கும். எனவே, முடிந்தவரை குறைந்த பணத்தை செலவழித்து, மிகவும் அவசியமான பொருட்களை மட்டும் வாங்கவும். இல்லையெனில் எதிர்காலத்தில் பாதகமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். பாதியில் சந்திரன் லக்னத்தில் நுழைந்தவுடன் வீட்டினரை தேவையில்லாமல் சந்தேகிப்பதும், அவர்களின் எண்ணம் குறித்து அவசர முடிவுகள் எடுப்பதையும் காணலாம். ஆனால் அவ்வாறு செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் ஒருவித அழுத்தத்தில் இருப்பார்கள், அவர்களுக்கு உங்கள் அனுதாபமும் நம்பிக்...
ரயிலை மிஸ் பண்ணிட்டிங்களா! இனி கவலை வேண்டாம் இப்படியொரு ஆப்ஷன் இருக்கிறது.! இந்திய ரயில்வே ரயில் பயணிகளுக்கு புதிய மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளது. அது என்னவென்றால் ஒருவர் டிக்கெட் புக் செய்த பிறகு போர்டிங் ஸ்டேஷனை (ஏறும் இடம்) மாற்றி கொள்ளும் வகையில் ஐஆர்சிடிசி விதியின்படி புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வசதி ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். மேலும் ஒருவர் தனது ஆன்லைன் புக்கிங் டிக்கெட்டில் ஒருமுறை மட்டுமே தனது போர்டிங் ஸ்டேஷனை மாற்றி கொள்ள முடியும். பயணி ரயில் பயணத்தைத் தொடங்குவதற்கு 24 மணி நேரத்திற்கு முன் இந்த மாற்றத்தை செய்ய வேண்டும். அதேபோல், ஒருவர் டிக்கெட்டில் தனது போர்டிங் ஸ்டேஷனை மாற்றிய பிறகு வேற இடத்தில் இருந்து ஏற முடியாது. டிக்கெட்டில் மாற்றப்பட்ட போர்டிங் ஸ்டேஷனில் மட்டுமே ரயில் ஏற முடியும். வேறு நிலையங்களில் ஏறினால் அபராதம் விதிக்கப்படும். மேலும் போர்டிங் பாயிண்ட் மற்றும் திருத்தப்பட்ட போர்டிங் பாயிண்ட் இடையே உள்ள கட்டண வித்தியாசத்தையும் செலுத்த வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக்கொண்டு கவன...
Comments
Post a Comment