அமாவாசையில் ஐதிகம்! வீடு வாசல் இல்லாதவர்களுக்கு அன்னதானம்! ஏன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்?
அமாவாசையில் ஐதிகம்! வீடு வாசல் இல்லாதவர்களுக்கு அன்னதானம்! ஏன் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்? பொதுவாக வீடு வாசல் இல்லாதவர்களுக்கு ஒவ்வொரு அமாவாசையிலும் அன்னதானம் செய்ய வேண்டும். மேலும் பசு, காகம், நாய், பூனை மற்றும் இதர ஜீவராசிகளுக்கும் உணவளிக்கலாம். அமாவாசையில் பிதுா் தா்ப்பணம் மற்றும் அன்னதானம் ஆகியவற்றைக் குல தெய்வம் அல்லது இஷ்ட தெய்வம் இருக்கும் இடத்தில் செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டிற்கு அருகிலேயே நம்மால் இயன்ற அளவு செய்யலாம். அமாவாசைக்கு தலையில் எண்ணெய் தடவிக் கொள்ளக் கூடாது. மேலும் மரம், செடி, கொடிகளையோ காய்கறிகளையோ புல் பூண்டுகளையோ தொடவோ , பறிக்கவோ கூடாது என்கின்றனர் ஜோதிட சாஸ்திர நிபுணர்கள். அமாவாசை ஐதிகம் அமாவாசை தினத்தில் முன்னோர்கள் வாரிசுகளை காண வருவதாக ஐதிகம். அப்போது அவர்களின் பசியையும், தாகத்தையும் தீர்க்கவே அமாவாசையன்று முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்கின்றன புராணங்கள். இது தவிர அறிவியல் ரீதியாகவும், அமாவாசையில் பிறக்கும் குழந்தைகளின் மூளை அதீதமாக வேலை செய்வதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அமாவாசையில் சூரியனும், சந்திரனும் ஒன்று சேர்வதால்...